டிக்கெட் மறுப்பு-பாஜகவுக்கு கீர்த்தி ஆசாத் மனைவி முழுக்கு

டெல்லி, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், ஜம்மு காஷ்மீர் ஆகிய 6 மாநில சட்டசபைகளுக்கு இம்மாத இறுதியில் தேர்தல் பல கட்டங்களாக நடைபெறவுள்ளது.
முதலில் டெல்லி சட்டசபைக்கு 29- ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக எதி்ர்ப்பலை பலமாக வீசி வருவதால், ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரமாக உள்ளது.
வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசார களத்தில் பாரதீய ஜனதா இறங்கிவிட்டது.
டெல்லி மாநில பாரதீய ஜனதா துணைத்தலைவர் பதவியில் பூனம் இருந்து வந்தார். தேர்தலில் போட்டியிட பூனம் ஆர்வமாக இருந்தார். ஆனால் அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த பூனம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் ராஜ்நாத்சிங்குக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அத்தோடு நில்லாமல், தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்று டிக்கெட் மறுக்கப்பட்டது குறித்து ஆவேசத்துடன் குரல் எழுப்பினார்.
டெல்லியில் 20 லட்சம் பூர்வாஞ்சல் இனமக்கள் வசிக்கிறார்கள். அவர்களை பாரதீய ஜனதா புறக் கணித்துவிட்டதாக பூனம் குற்றம் சாட்டினார். பூர்வாஞ்சல் இன மக்களை திரட்டி பேரணி நடத்துவேன் என்றும் கூறினார்.
அவருடன் வந்த ஆதரவாளர்கள் பாரதீய ஜனதா மூத்த தலைவரும் முதல் மந்திரி வேட்பாள ருமான மல்கோத்ரா, பொதுச்செயலாளர் அருண் ஜெட்லி, மாநில தலைவர் ஹர்ஷ்வர்தன் ஆகியோருக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் பாஜக அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications