ஓபாமா வெற்றி செய்தியை வெளியிட்ட நாளிதழ்கள் ஏலம்!

Subscribe to Oneindia Tamil

Obamas news paper
நியூயார்க்: பாரக் ஓபாமாவின் வெற்றி செய்திகளை வெளியிட்ட இதழ்களை ஏலம் விட அமெரிக்க செய்தித்தாள் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

அமெரிக்காவின் முதல் கருப்பர் இன அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பாரக் ஓபாமா. அவரது வெற்றியை உலகெங்கும் உள்ள கருப்பர் இன மக்கள் தங்களது வெற்றியாக நினைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்க அரசியல் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள ஓபாமாவின் வெற்றிச் செய்தியை வெளியிட்ட இதழ்களை ஏலத்தில் விட அமெரிக்காவின் முன்னணி செய்தித்தாள் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இ-பே மூலம் இந்த இதழ்கள் ஏலம் விடப்படவுள்ளன. நியூயார்க் டைம்ஸ் செய்தித் தாள் 75 டாலர்களுக்கு ஏலம் விடப்படவுள்ளது. 20 இதழ்கள் 255 டாலர்களுக்கும் மேல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் விடப்படும் செய்தித்தாள்கள் உண்மையானவை, போலிகள் அல்ல என்றும் இ-பே அறிவித்துள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் இதழின் ஒரு பிரதி 50 டாலர் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சலெஸ் டைம்ஸ் இதழின் ஒரு பண்டல் (50 பிரதிகள்) 1800 டாலர்களுக்கு ஏலம் விடப்படுகிறது. ஒரு பிரதி 25 டாலர் வரை போகக் கூடும் எனத் தெரிகிறது.

மற்ற இதழ்களும் கூட ஓபாமா வெற்றிச் செய்தி இடம் பெற்ற தங்களது பிரதிகளை ஏலம் விட முடிவு செய்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+