வன்னியில் 1.5 லட்சம் தமிழர்கள் தவிப்பு: சி்ங்கள எம்.பி தகவல்

சிங்கள எம்.பியான பேராசிரியர் ஜெயலத் ஜெயவர்த்தனா டெல்லி வந்துள்ளார். அங்கு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் இலங்கைப் போரினால் தமிழர்கள் படும் அவதியை புட்டுப் புட்டு வைத்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜெயலத் ஜெயவர்த்தனேவின் அறிக்கை ...
வவுனியாவுக்குச் செல்லும் பிரதான பாதை (ஏ-9) முற்றிலும் மூடப்பட்டுள்ளது. இதனால் வவுனியாவில் உள்ள தமிழர்கள் அகதிகளாகியுள்ளனர். தண்ணீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் அவர்களுக்குக் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
முதியோர், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் நிலை மிக மிக பரிதாபமாக உள்ளது.
அங்கு பல வெளிவராத அதிர்ச்சியான உண்மை நிலவரங்கள் யாரையம் அதிர வைப்பதாக உள்ளது.
வன்னியில் ஒன்றரை லட்சம் பேர் அதிகளாக்கப்பட்டுள்ளதாக அங்கு சென்று ஆய்வு நடத்தி வந்த மன்னார் பாதிரியார் ராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவத்தின் ஆர்ட்டில்லரி தாக்குதல்கள், வான் தாக்குதல்கள், ராணுவத் தாக்குதல்களால் இவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, மலேரியா உள்ளிட்ட நோய்களாலும், தொற்று நோய்களாலும் பீடிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இவர்கள் வசித்துக் கொண்டுள்ளனர்.
குழந்தைகள் அனைவருமே நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி, பருப்பு, சீனி என எந்த வகையான உணவுப் பொருளும் சரிவர கிடைப்பதில்லை.
விவசாயம், மீன் பிடி என எந்தத் தொழிலும் இப்பகுதிகளில் நடைபெறவில்லை. கிட்டத்தட்ட அடிமைகள் போன்ற நிலையில் இங்குள்ள தமிழர்கள் தத்தளித்து வருகின்றனர்.
இப்பகுகுதிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அரசு மிக மிக குறைந்த அளவிலேயே விநியோகித்து வருகிறது.
இப்பகுதியை விரைவி் புணரமைக்க வேண்டும். இங்குள்ளவர்களுக்கு விரைவில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இவர்களின் நிலை மிகவம் மோசமாகி விடும்.
அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக சேவையாளர்கள், தொண்டு நிறுவனத்தினர், மத குருக்கள் என யாருமே இங்கு சென்று பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஜெயவர்த்தனே.
ஜெயவர்த்தனேவின் இந்த அறிக்கை, இலங்கையில் தமிழர்கள் பட்டு வரும் பெரும் துயரத்தை விளக்கும் ஒரு சிறந்த ஆதாரமாக வெளிப்பட்டுள்ளது.
வவுனியா நிலையை மட்டும் இவர் தெரிவித்துள்ளார். போர் நடந்து வரும் கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் இதை விட மோசமான நிலையே நிலவும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications