பிரதமர் இன்று ஓமன்-கத்தார் பயணம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் பயணமாக இன்று ஓமன், கத்தார் நாடுகளுக்குச் செல்கிறார்.
இரு தரப்பு உறவுகள், பெட்ரோலிய சப்ளை, எரிசக்தி பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அந் நாட்டுத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
முதலில் ஓமன் செல்லும் பிரதமர் நாளை கத்தார் செல்கிறார். கத்தாருக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் சிங் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடன் வெளிநாட்டு இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி, வெளியுறவுத்துறை இணையமைச்சர் அஹமத் உள்ளிட்ட உயர் மட்டக் குழுவும் செல்கிறது.
ஓமனில் 5,50,000 இந்தியர்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டுக்கு கடைசியாக 1998ம் ஆண்டில் வாஜ்பாய் தான் பிரதமராக தனது பயணத்தை மேற்கொண்டார். இதையடுத்து இந்தியப் பிரதமர் செல்வது இதுவே முதல் முறையாகும்.
அமெரி்க்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அனைத்து நாடுகளுமே பண பலம் மிக்க வளைகுடா நாடுகள் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளன. வளைகுடா நாடுகளின் முதலீடுகளை ஈர்க்க பெரும் போட்டி நடந்து வருகிறது.
இந் நிலையில் இந்தியப் பிரதமரி்ன் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications