'ஸ்பெக்ட்ரம்' முறைகேடு?: ராஜினாமா செய்யத் தயார்-ராஜா

அதிகபட்ச விலை கொண்ட இந்த அலைவரிசைகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவே காரணம் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக சந்தேகம் எழுப்பப்படுகிறது.
இது தொடர்பாக ராஜாவுக்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், இடதுசாரிகளும் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்துள்ளன.
இரண்டாம் தலைமுறை அலைவரிசைகள் (2 generation specrtum) பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 9,000 கோடி வருமானம் வந்தது.
ஆனால், ரூ. 60,000 கோடி மதி்ப்புள்ள இந்த அலைவரிசைகள் ஏன் வெறுமனே ரூ. 9,000 கோடிக்கு விலை போயின என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் ஸ்வான், யூனிடெக் ஆகிய இரு நிறுவனங்கள் அலைவரிகளை வாங்கின. இதில் ஸ்வான் ரூ. 1,537 கோடி மட்டுமே செலுத்தியது. யூனிடெக் ரூ. 1,651 கோடி மட்டுமே செலுத்தியது.
ஆனால், இந்த அலைவரிசைகளை வைத்து இந்த நிறுவனங்களின் மதிப்பு ரூ. 9,400 கோடி மற்றும் ரூ. 11,620 கோடி என உயர்ந்துள்ளது. இத்தனைக்கும் இவர்கள் இன்னும் தொலைத் தொடர்பு சேவையை தொடங்கவே இல்லை. சரியாகச் சொன்னால், ஸ்பெக்ட்ரம் வாங்கியதைத் தவிர இவர்களிடம் எந்த கட்டமைப்பும் இல்லை, வாடிக்கையாளர்களும் இல்லை.
ஆகவே, அவர்களிடம் உள்ள ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு தான் ரூ. 9,400 கோடி மற்றும் ரூ. 11,620 கோடி. ஆனால், இதை இவர்கள் வாங்கியது வெறும் ரூ. 1,537 கோடி மற்றும் ரூ. 1,651 கோடிக்குத் தான்.
இந் நிலையில் தான் இதில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் ராஜா, இதில் ஊழல் நடந்திருப்பதாகவோ, தான் விதிகளை மீறியிருப்பதாகவோ நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிகளி்ன்படி தான் அலைவரிசைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
ஸ்வான் மற்றும் யூனிடெக் ஆகியவை தங்களது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றதால் தான் அவர்களுக்கு நிதி கிடைத்துள்ளது. இதனால் தான் இந்தப் பிரச்சனையே எழுந்துள்ளது. ஆனாலும் அவர்களது வி்ற்பனை மூலம் நாட்டுக்கு 11,620 கோடி அன்னிய செலாவணி வந்துள்ளது. அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக எல்லா பங்குகளையும் அந்த நிறுவனங்கள் வி்ற்கவில்லை.
ஏற்கனவே இந்தத் தொழிலில் உள்ள நிறுவனங்களின் ஆதிக்கத்தைத் தகர்த்து புதிய நிறுவனங்களுக்கும் ஸ்பெக்ட்ரம் கிடைக்க வழி செய்ததால் தான் இந்தக் குற்றச்சாட்டே கிளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஸ்வான், யூனிடெக் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது பங்குகளை விற்பனை செய்ததற்கு தடை விதிக்குமாறும் தொலைத் தொடர்பு கமிஷனுக்கு பரிந்துரைத்துள்ளேன் என்றார்.
46 நிறுவனங்கள் இந்த ஸ்பெக்ட்ரங்களைக் கேட்ட நிலையில் ஏன் ஒரு சிலருக்கு மட்டுமே அவை விற்கப்பட்டன, டெண்டர் விட்டு ஏலத்தில் வி்ற்றிருக்க வேண்டியது தானே என்ற கேள்விக்கு பதிலளித்த ராஜா, எல்லாம் தொலைத் தொடர்பு ஆணையத்தின் பரிந்துரைப்படி தான் நடந்துள்ளது.
டெண்டர் மூலம் இதை விற்க முடியாது. காரணம், அவை ஒரே நேரத்தில் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. முதலில் வருபவர்களுக்கு முதலில் விற்பனை என்ற விதிகளின்படி தான் அவை ஒதுக்கப்படுகின்றன.
மேலும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் மத்திய அரசு வருமானத்தில் பங்கு ஈட்டப் போகிறது. இது ஏலத் தொகையில் கிடைக்கும் லாபத்தை விட பல மடங்கு அதிகமான லாபத்தை ஈட்டித் தரும். ஏலம் மூலம் ஒரு முறை தான் பணம் வரும், வருவாயில் பங்கு என்பது கடைசி வரை லாபம் தரும் என்றார்.
ஸ்பெக்ட்ரங்களை 2001ம் ஆண்டு விலைக்கே இப்போதும் விற்க வேண்டாம், விலையைக் கூட்டுங்கள் என ஆணையம் பரிந்துரை செய்துள்ளதை ஏன் அமலாக்கவில்லை, இன்னும் ஏன் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகிறது என்ற கேள்விக்கு ராஜா பதிலே சொல்லவில்லை.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications