60 வயதில் அரசியலுக்கு வருவார் ரஜினி: சிரஞ்சீவி

சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு சிரஞ்சீவி அளித்த பேட்டியில் இத்தகவலை அவர் வெளியிட்டார்.
ஆந்திராவில் சமீபத்தில்தான் 'பிரஜா ராஜ்யம்' கட்சியைத் தொடங்கியுள்ளார் சிரஞ்சீவி. அரசியல் குறித்தும் தன் புதிய கட்சி குறித்தும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ரஜினியுடன் ஆலோசனை நடத்தி வருபவர், ரஜினிக்கு மிகவும் நெருக்கமானவராகப் பார்க்கப்படுபவர் சிரஞ்சீவி.
பேட்டியின் போது, ரஜினியின் அரசியல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
"ரஜினி கட்டாயமாக அரசியலில் ஈடுபட வேண்டும். அவரிடம் இருந்து மக்கள் நிறையவே எதிர்பார்க்கின்றனர்", என்று அவர் பதில் கூறினார்.
ரஜினி தனது அரசியல் திட்டம் பற்றி உங்களுடன் விவாதித்துள்ளாரா என கேட்டதற்கு, "ஆமாம். பல நேரங்களில் விவாதித்துள்ளார். அப்போது, 'நான் 60 வயதில் அரசியலுக்கு வருவதே சரியாக இருக்கும்' என்று அவர் கூறியிருக்கிறார்," என்றார் சிரஞ்சீவி.
வரும் 2010-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதியில் ரஜினிக்கு 60 வயது முடிந்து, 61-வது வயது தொடங்குகிறது.
சிரஞ்சீவியிடம் ரஜினிகாந்த் கூறியதை வைத்து நோக்கும்போது, 2010-ல் 60 வயது பூர்த்தியாகும் ரஜினி, 2011-ல் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குள் அரசியலுக்கு வரக்கூடும் என்று தெரிகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications