ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் விபத்தில் 20 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: ரஷ்யாவில் அணு நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட விபத்தில் அதில் இருந்த 20 பேர் பலியானார்கள்.
ரஷியாவின் பசிபிக் பிராந்திய கடற்படைப் பிரிவில் இடம் பெற்றுள்ள அந்த அணு நீர்மூழ்கிக் கப்பலில் வழக்கமான சோதனைகள் நடந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
இதில் 20 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் கப்பலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அதிலிருந்து அணுக் கதிர்வீச்சும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து சோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications