நெல்லை அருகே போலீஸ்காரர் மகள் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை அருகே தாழையூத்து என்ற இடத்தில் போலீஸ்காரரின் மகள் கடத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.
நெல்லை அருகேயுள்ள தாழையுத்து பஜார் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். நெல்லை எஸ்பி அலுவலகத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் மகேஸ்வரி.
தாழையுத்தில் உள்ள ஒரு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் பள்ளி செல்வதாக கூறிவிட்டு சென்ற மகேஸ்வரி அதன் பிறகு வீடுதிரும்பவில்லை. அவரை யாரோ கடத்தி சென்றிருக்கலாம் என தெரிகிறது.
இதுகுறித்து லட்சுமணன் தாழையுத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications