திமுக பாணியில் பாஜக!
ரெய்ப்பூர்: தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியைப் போல, கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குத் தரப்படும் என சட்டீஸ்கர் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று தலைநகர் ரெய்ப்பூரில் இன்று வெளியிட்டது.
இதில் முக்கிய அம்சமாக கிலோ அரிசி ரூ. 1 என்ற புதிய திட்டம் இடம் பெற்றுள்ளது. அந்த்யோதயா ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்களுக்கு இந்தத் திட்டம். மற்ற ஏழை மக்களுக்கு கிலோ அரிசி ரூ. 2 க்கு வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
இதுதவிர 32 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக உப்பு வழங்கப்படும். 5 குதிரை சக்தி கொண்ட பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவும் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
இந்த தேர்தல் அறிக்கையை முதல்வர் ரமன் சிங்கும், மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் ரவி சங்கர் பிரசாத்தும் இணைந்து வெளியிட்டனர்.
பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பிற முக்கிய அம்சங்கள் ...
- விவசாயிகளுக்கு இலவச கடன்.
- விவசாய கருவிகள் வாங்க 50 சதவீத மானியம்.
- விவசாயிகளுக்கான கடனுதவி ரூ.. 3 லட்சத்திலிருந்து 5
லட்சமாக உயர்வு.
- பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு படிப்புதவி.
- உயர் படிப்புக்கு வட்டி இல்லாத கடன்.
- பெண் தொழிலாளர்களுக்கு 10 ரூபாய் கூடுதல் கூலி.
- மாவட்டந்தோறும் ஸ்டேடியம்.
- ரெய்ப்பூரை மாநிலத்தின் இதர முக்கிய நகரங்களுடன் இணைக்க மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல முக்கிய
அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications