நிலவை நெருங்கியது சந்திராயன்-200 கி.மீ தொலைவில் சுற்றுகிறது
பெங்களூர்: இந்தியாவின் சந்திராயன்-1 விண்கலம், நிலவை வேகமாக நெருங்கி வருகிறது. இன்று காலை நிலவுக்கும், சந்திராயனுக்கும் இடையிலான தொலைவு 200 கிலோமீட்டராக குறைக்கப்பட்டது.
முற்றிலும் இந்தியாவின் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதலாவது ஆளற்ற நிலவு விண்கலமான சந்திராயன்-1 நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு சந்திராயன்-1 நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது. அப்போது நிலவுக்கும், சந்திராயனுக்கும் இடையிலான தொலைவு 504 கிலோமீட்டராக இருந்தது.
இந்த நிலையில் நேற்று இது மேலும் குறைக்கப்பட்டு 200 கிலோமீட்டராக குறைக்கப்பட்டது. இதுதொடர்பான பணியை பெங்களூரில் உள்ள இஸ்ரோவின், டெலிமெட்ரி மற்றும் கமாண்ட் கட்டமைப்பின் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்தனர்.
இரவு 8.03 மணிக்கு தொடங்கிய இந்தப் பணி 57 விநாடிகள் நீடித்தது. விண்கலத்தில் உள்ள 440 நியூட்டன் திரவ என்ஜினை இயக்கி சந்திராயனுக்கும், நிலவுக்கும் இடையிலான தொலைவு குறைக்கப்பட்டது.
வரும் நாட்களில் சந்திராயனின் தொலைவு மேலும் குறைக்கப்படும். நவம்பர் 15ம் தேதி வாக்கில் அது 100 கிலோமீட்டர் தொலைவுக்கு குறைக்கப்படும். அதன் பின்னர் விண்கலத்தில் உள்ள மூன் இம்பாக்ட் பிராப் நிலவின் தரைப் பகுதியில் இறங்கும். பின்னர் சந்திராயனில் இடம் பெற்றுள்ள மற்ற 10 அறிவியல் சாதனங்களும் தங்களது பணிகளைத் தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துளளது.
அக்டோபர் 22ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து சந்திராயன் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications