'பார்ட்டி': போதையில் ரகளையா?-ஸ்ரீசாந்த் மறுப்பு

ஓசூர் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிப்பில் நேற்று முன்தினம் இரவு நடந்த இரவு விருந்தில் ஸ்ரீசாந்த் கலந்து கொண்டார். அவருடன் சில பெண்கள் உள்ளிட்ட ஸ்ரீசாந்த்தின் நண்பர்களும் பங்கேற்றனர்.
விடிய விடிய நடந்த இந்த இரவு விருந்தின்போது மது போதையில் ஸ்ரீசாந்த்தும், அவரது நண்பர்களும் அக்கம் பக்கத்தினருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளையாக நடந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அக்குடியிருப்பில் வசி்பவர்கள் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளனர். அதில் ஸ்ரீசாந்த் தங்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் இந்தப் புகாரை ஸ்ரீசாந்த் மறுத்துள்ளார். எனக்கு எதிராக சிலர் அவதூறான செய்திகளை தொடர்ந்து பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்ரீசாந்த் சமீப காலமாக அதிகளவில் சர்ச்சையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நடிகைகள் சிலருடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் குடி போதையில் ரகளையில் ஈடுபட்டதாக புதிய சர்ச்சையில் அவர் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications