பரந்தன், பூனேரியில் இலங்கை படைகள் குண்டு வீசித் தாக்குதல்
கொழும்பு: வன்னிப் பகுதியில் உள்ள பூனேரி, பரந்தன் ஆகிய இடங்களில் இலங்கை விமானப்படை விமானங்கள் குண்டு வீசி சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டன. இதில் 2 வயது குழந்தை உள்ளிட்ட ஐந்து அப்பாவித் தமிழர்கள் படுகாயமடைந்தனர்.
ஆனால் இந்தத் தாக்குதலில் பரந்தனில் உள்ள விடுதலைப் புலிகளின் கடற்பிரிவு மையம் மற்றும் பூனேரியில் உள்ள விடுதலைப் புலிகளின் படைப் பிரிவு ஆகியவை சேதமடைந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியைப் பிடிக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள இலங்கை படைகள், வன்னி பகுதியிலும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக மன்னாரையும், பூனேரியையும் இணைக்கும் ஏ-32 நெடுஞ்சாலையைப் பிடிக்க தீவிரமாக இறங்கியுள்ளன.
இந்த நிலையில், நேற்று பூனேரி, பரந்தன் ஆகிய பகுதிகளில் விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.
இதில் மனோகரன் விதுரன் (2) என்ற சிறுவன் உள்ளிட்ட ஐந்து அப்பாவிகள் படுகாயமடைந்தனர். குடியிருப்புகளைக் குறி வைத்து விமானப்படை தாக்கியதாக புலிகள் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படுகாயமடைந்த சிறுவன் விதுரனின் தாயார் ஒரு மாதத்திற்கு முன்புதான் இலங்கைத் தாக்குதலில் உயிரிழந்தார். நேற்று அவரது 30வது நாள் காரியம் நடந்தபோதுதான் விதுரன் குண்டு வீச்சில் காயமடைந்த துயரம் நடந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications