எம்எல்ஏக்கள் கூட்டம்-ஜெ, எஸ்வி.சேகர் வரவில்லை
சென்னை: சென்னையில் இன்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் உடல் நலக்குறைவு காரணமாக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வரவில்லை. அதேபோல மேலிடத்துடன் சுமூக நிலையில் இல்லாத மயிலாப்பூர் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகரும் வரவில்லை. அவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது.
இக்கூட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை குறித்து விவாதிக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு சட்டசபை அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும் இலங்கைப் பிரச்சினை, மின் சாரப் பிரச்சினை குறித்து கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
உடல் நலக்குறைவு காரணமாக கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. அதேபோல மேலிடத்துடன் உரசல் போக்கில் ஈடுபட்டுள்ள மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.வி.சேகரும் கூட்டத்திற்கு வரவில்லை. அவர் கூட்டத்துக்கே அழைக்கப்படவில்லை என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications