இலங்கையி்ல் போரை நிறுத்த வேண்டும்-அதிமுக
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று ஈழத் தமிழர்கள் விவகாரம் எதிரொலித்தது. அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஒரே குரலில் கோரிக்கை வைத்தனர்.
இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் எழுந்து, புலிகளை ஆதரிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும். அது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றார். இதற்கு பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்களுக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் நிலவியது.
இதையடுத்து ஞானசேகரனுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி மறுத்தார்.
அப்போது பாமக தலைவர் மணியும், சிபிஐ எம்எல்ஏ சிவபுண்ணியமும், இலங்கையில் உடனே போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்பாவி்த் தமிழர்களின் கொலையைத் தடுக்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து கூச்சலில் ஈடுபடவே அவையில் அரை மணி நேரம் குழப்பம் நிலவியது.
இதையடுத்து அதிமுக சார்பில் தரப்பட்ட ஒத்தி வைப்புத் தீர்மானத்தில் பேசுமாறு செங்கோட்டையனை சபாநாயகர் அழைத்தார்.
அப்போது எழுந்த பல்வேறு கட்சி எம்எல்ஏக்கள், இங்கே என்ன பிரச்சனையை எழுப்ப விரும்புகிறோம் என்பதைக் கேட்டுவிட்டு, பின்னர் அதற்கான தேதியை ஒதுக்கி விவாதத்துக்கு சபாநாயகர் அனுமதிக்க வேண்டும் என்றனர்.
ஆனால், அதை சபாநாயகர் ஏற்க மறுத்தார். அப்போது எழுந்த முதல்வர் கருணாநிதி, என்ன பிரச்சனையை கிளப்ப விரும்புகிறீர்கள் என ஒவ்வொரு கட்சியினரும் தெரிவித்தால் அதற்கு பதிலளிக்க அரசுக்கு ஏதுவாக இருக்கும் என்றார்.
இதையடுத்து அவர்களை சபாநாயகர் பேச அனுமதித்தார். அப்போது எழுந்த அதிமுக, பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏக்கள் இலங்கையில் போரை உடனே நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், போரை நிறுத்த புலிகள் தயாராக உள்ள நிலையில் இலங்கைக்கு நெருக்கடி தருமாறு மத்திய அரசு மீது தமிழக அரசு கோரிக்கை வைக்க வேண்டும் என்றனர்.
காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் பேசுகையி்ல், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதில் காங்கிரசுக்கு மாற்றுக் கருத்தே இல்லை. அதே நேரத்தில் புலிகளையும் பிரபாகரனையும் ஆதரிக்கும் கட்சிகள், அமைப்புகள், திரைப்படத் துறையினரை அரசு கைது செய்ய வேண்டும்.
வைகோ, அமீர், சீமானை மட்டும் கைது செய்த அரசு ஏன் திருமாவளவனைக் கைது செய்யவில்லை என்றார்.
அதிமுக சார்பில் பேசிய பன்னீர்செல்வம், இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வந்து தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தை தயவு செய்து உறுப்பினர்கள் திசை திருப்பக் கூடாது.
இரு தரப்பினரும் முன் வந்தால் தான் போர் நிறுத்தம் சாத்தியம் என முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார். இப்போது புலிகள் போர் நிறுத்தத்துக்கு தயார் என அறிவித்துவிட்டன. ஆனால், இலங்கை அரசு தான் அதை நிராகரித்துவிட்டதோடு, தமிழர்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
எனவே இந்த விஷயத்தில் முதல்வர் மத்திய அரசுடன் உடனே பேசி, போரை நிறுத்தவும் அங்கே தமிழர்கள் அமைதியாக வாழவும் வழி வகை செய்ய வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications