போலீஸ் சித்திரவதை: பாதிக்கப்பட்டவருக்கு ரூ 20,000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
அரியலூர்: போலீஸ் கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ 20 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரியலூர் மாவட்டம, பாபநாசேரியைச் சேர்ந்தவர் செல்வராஜ்.
இவருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், மாநில மனித உரிமை ஆணையத்திடம் செல்வராஜ் இது குறித்து புகார் கொடுத்தார். அதில், 2002- ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எனது வீட்டுக்கு பெரம்பலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலகுரு வந்தார்.
அவர் எனது சகோதரர் அருள்ராஜூஐ சொத்துத் தகராறு பற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அவரை அடித்து உதைத்து சித்தரவதை செய்தார்.
மேலும், என்னை ஒரு நாள் சட்டவிரோத காவலில் வைத்து துன்புறுத்தினார் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி வெங்கடாசல மூர்த்தி, உறுப்பினர் மாரியப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவி்ல் நீதிபதி தனது உத்தரவில், சொத்து தகராறு காரணமாக செல்வராஜை போலீஸ் காவலில் வைத்து துன்புறுத்தியதற்காக அவருக்கு தமிழக அரசு ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
இந்தப் பணத்தை தவணை முறையில் பெரம்பலூர் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாலகுருவிடம் வசூலிக்க வேண்டும்.
அத்துடன் சரக டி.ஐ. ஜி., பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் பாலகுரு மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications