ஓகனேக்கல் தொடர்பாக கருணாநிதி, பிரதமருடன் பேச்சு: எதியூரப்பா
சென்னை: ஓகனேக்கல் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்பட வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதியுடன் பேச்சு நடத்துவேன் என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா தெரிவித்தார்.
தினமணி, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் மனோஜ்குமார் சொந்தாலியாவின் மகள் திருமணத்தில் பங்கேற்க சென்னைக்கு நேற்று இரவு வந்த எதியூரப்பா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓகனேக்கல் பிரச்சினை தொடர்பாக அவசரம் காட்டக் கூடாது. இதில் சுமூக தீர்வு காணப்பட வேண்டும்.
இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசுவேன். முதல்வர் கருணாநிதியுடனும் பேசுவேன்.
ஓகனேக்கல் திட்டத்தை கர்நாடகம் எதிர்க்கிறது. இதை செயல்படுத்தக் கூடாது. மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றார் எதியூரப்பா.
திருமண நிகழ்ச்சியில் எதியூரப்பாவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அப்போது இருவரும் சிறிது நேரம் பேசினர்.
மத்திய அரசு தலையிட முடியாது - மொய்லி
இதற்கிடையே, பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வீரப்ப மொய்லி, ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதில் மத்திய அரசு தலையிட முடியாது. இரு மாநிலங்களும் சுமூகமான முறையில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications