மார்கரெட் ஆல்வா ராஜினாமா ஏற்பு - கமிட்டிகளிலிருந்து நீக்கம்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த மார்கரெட் ஆல்வாவை, கட்சியின் பல்வேறு கமிட்டிகளிலிருந்து காங்கிரஸ் மேலிடம் நீக்கியுள்ளது. அவரது ராஜினாமாவும் ஏற்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பணம் வாங்கிக் கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் சீட் தந்ததாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் மார்கரெட் ஆல்வா. இந்த பேச்சால் கடுப்பான காங்கிரஸ் மேலிடம், ஆல்வா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது.
இந்த நிலையில் மார்கரெட் ஆல்வா நேற்று தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். ஆல்வாவின் ராஜினாமா கட்சித் தலைவர் சோனியா காந்தி ஏற்றுக்க் கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர், தேர்தல் குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளிலிரு்நது இன்று மார்கரெட் ஆல்வாவை கட்சி மேலிடம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
பொதுச் செயலாளராக இருந்து வந்த 66 வயது மார்கரெட் ஆல்வா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநில காங்கிரஸ் விவகாரங்களைக் கவனித்து வந்தார்.
தற்போது மகாராஷ்டிர மாநில பொறுப்பை ஏ.கே.அந்தோணியும், மோதிலால் வோரா ஹரியானாவையும், பஞ்சாப்-சண்டிகர் பொறுப்பை மோஷினா கித்வாயும், மேகாலா, மிஸோரம், நாகாலாந்து பொறுப்பை ஆஸ்கர் பெர்னாண்டஸும் கவனிப்பார்கள் என காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications