கப்பலைத் தாக்கி கடற் திருடர்கள் - தாக்கி விரட்டிய இந்திய கடற்படை
டெல்லி: ஏடன் வளைகுடா பகுதியில் இந்திய கப்பலைத் தாக்கிக் கொள்ளையடிக்க முயன்ற கடல் திருடர்களை இந்திய கடற்படை தாக்கி விரட்டியது.
எம்.வி. ஜாக் அர்னவ் என்ற கப்பல் சூயஸ் கால்வாயைக் கடந்து, கிழக்கு நோக்கி போய்க் கொண்டிருந்தது. அப்போது கடல் திருடர்களை கப்பலை சூழந்தனர். கப்பலுக்குள் ஏறி அதைக் கடத்த முயன்றனர்.
அந்தக் கப்பலில் 38 ஆயிரத்து 265 டன் பொருட்கள் இருந்தன. மும்பையைச் சேர்ந்த கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பங் கழகத்திற்குச் சொந்தமான கப்பல் இது.
கப்பலை திருடர்கள் சூழ்ந்ததைத் தொடர்ந்து ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக் கப்பல் ஐ.என்.எஸ் தபருக்குத் தகவல் போனது.
இதையடுத்து இந்தியக் கடற்படைக் கப்பல் அங்கு விரைந்தது. அதில் இருந்த கடற்படை கமாண்டோ வீரர்கள், மின்னல் வேகத்தில் செயல்பட்டு துப்பாக்கிகளால் சுட்டு திருடர்களை விரட்டியடித்தனர். இதையடுத்து கப்பலைக் கடத்தும் முயற்சியைக் கைவிட்டு விட்டு கடல் திருடர்கள் ஓடி விட்டனர்.
மின்னல் வேகத்தில் இந்திய கடற்படைக் கப்பல் விரைந்ததால் கப்பலைக் கடத்தும் முயற்சி தவிர்க்கப்பட்டது.
பின்னர் மும்பை சரக்குக் கப்பலுக்குப் பாதுகாப்பாக ஐ.என்.எஸ். தபர் உடன் சென்று பாதுகாப்பான பாதையில் அதை விட்டு விட்டுத் திரும்பியது.
இப்பகுதியில் கடற் கொள்ளையர்கள் அட்டகாசம் இருப்பதால் கடந்த அக்டோபர் 23ம் தேதிதான் ஐ.என்.எஸ். தபர் இப்பகுதியில் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்பட்டது.
இந்தியக் கப்பல்கள் தாக்கப்பட்டால் அல்லது கடத்த முயற்சி நடந்தால் அதை முறியடிக்க இந்திய கடற்படைக் கப்பல் அங்கு நிலை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications