விசா மோசடி: தலைமறைவான 3 சரவண பவன் ஊழியர்கள் கைது
சென்னை: போலி விசா மோசடி தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த 3 சரவண பவன் ஊழியர்கள் கைதாகியுள்ளனர்.
அமெரிக்காவுக்கு போலி விசா மூலம் ஆட்களை கடத்த முயன்றதாக கூறி பிரபல ஹோட்டல் அதிபர் சரவண பவன் ராஜகோபாலின் மகன் சிவக்குமாரும், சரவண பவன் ஊழியர் ராமுவும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து போலி விசா மூலம் அமெரிக்கா செல்ல தயாராக இருந்த சுப்ரமணி, ஆசைத்தம்பி, சேகர் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
இவர்களைப் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று ஆசைத்தம்பியும், சுப்ரமணியும் கோர்ட்டில் சரணடைந்தனர். சேகர் இன்று கைது செய்யப்பட்டார்.
3 பேரையும் போலீஸார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன - கூடுதல் டிஜிபி
இதற்கிடையே, போலி விசா மோசடியில் சிவக்குமாருக்கு உள்ள தொடர்புகள் குறித்த முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அவர்களது நிறுவனத்தில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. அவை உபயோகமாக உள்ளன. அவற்றை ஆராய்ந்து பார்த்து விட்டு, தேவைப்பட்டால் அவர்களை கஸ்டடியில் எடுப்போம் என்றார்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications