ஆளுநரிடமிருந்து பட்டம் பெற மறுத்த நெல்லை மாணவி
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. அப்போது ஒரு மாணவி கவர்னரிடமிருந்து பட்டம் பெற மறுத்து தனது இருக்கைக்கு திரும்பினார். இதனால் பட்டமளிப்பு விழா அரங்கில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விசாரித்த போது அந்த மாணவி நாகர்கோவில் ஈத்தாமொழியை சேர்ந்த பிருந்தா என்பது தெரிய வந்தது.
இப்பிரச்சனை தொடர்பாக அவர் கூறும்போது நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரி பேராசிரியர் செல்வராஜ் மேற்பார்வையில் 99ம் ஆண்டு விலங்கியலில் பிஎச்டி ஆய்வுக்குப் பதிவு செய்தேன். இந்த நிலையில், நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் எனக்கு கடல் வாழ் உயிரினங்கள் குறித்து மட்டும் ஆய்வு செய்திருப்பதாக கூறி அதற்குரிய பட்டம் வழங்க முயற்சி நடந்தது.
இதனை நான் பார்த்து அதனை கவர்னரிடம் வாங்காமல் திரும்பி விட்டேன். எனக்கு விலங்கியலில் பி.எச்.டி பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து பல்கலை துணைவேந்தர் சபாபதி மோகனிடம் விசாரித்த போது பிஎச்டியில் சம்பந்தப்பட்ட மாணவி செய்த ஆய்வின் அடிப்படையில் அந்த பாடத்திற்கான பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பட்டத்தை அவர் பெறவில்லை. இதுகுறித்து முழுவதும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பட்டமளிப்பு விழா முடிவடைந்ததும் மாணவி பிருந்தா கவர்னர் பர்னாலாவிடம் தனக்கு விலங்கியலில் பிஎச்டி ஆய்வு பட்டம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும் என கவர்னர் பர்னாலா உறுதியளித்தார்.
இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது முடிவுக்கு வந்தது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications