ராஜபக்சே வருகையை எதிர்த்து சத்தியமங்கலத்தில் கடையடைப்பு
சத்தியமங்கலம்: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று கடையடைப்பு நடத்தப்பட்டது. அக்கம் பக்கத்து கிராமங்களிலும் இந்த கடையடைப்பு முழு அளவில் நடந்தது.
இலங்கை அதிபர் ராஜபக்சே 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்த நிலையில் இனப்படுகொலையை நிறுத்த மறுக்கும் ராஜபக்சேவின் வருகையைக் கண்டித்து சத்தியமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
அனைத்து கிராமங்களிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கருப்புக் கொடிகளும் ஆங்காங்கு ஏற்றப்பட்டிருந்தன.
ஈரோட்டில் ..
இதேபோல ஈரோடு அரசு மருத்துவமனை எதிரே ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ முன்னணி சார்பில் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து 11 பெண்கள் உள்ளிட்ட போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications