8.98 சதவீதமாகக் குறைந்தது பணவீக்கம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தொடர்ந்து பல மாதங்கள் பத்து சதவீதத்துக்கும் மேல் பயமுறுத்திக் கொண்டிருந்த பணவீக்க அளவு இந்த வார முடிவில் 8.98 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கிடு கிடுவென சரிந்து வருவதால் பணவீக்கம் இந்த அளவு குறைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் 10.72 சதவிகிதமாக இருந்த்து. தொடர்ந்து காய்கறிகள் மற்றும் நுகர்வுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டாலும், மூலதனப் பொருட்களின் விலை குறைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், நாப்தா, ஜெட் விமானங்களுக்கான எரிபொருள், லகு ரக டீஸல் போன்றவற்றின் விலை இந்த வாரம் கணிசமாகக் குறைந்துள்ளது (அதாவது கொள்முதல் விலை குறைந்துள்ளது. ஆனால் விற்பனை விலை மாறாது என பெட்ரோலியத்துறை கூறிவிட்டது நினைவிருக்கலாம்).












Click it and Unblock the Notifications