2 மாணவர்களை வெறித்தனமாக தாக்கிய சட்டக் கல்லூரி மாணவர்கள்

சென்னை பாரிமுனையி்ல் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உள்ளது. இங்கு ஜாதி ரீதியாகவும், அரசியல் கட்சிகள் ரீதியாகவும் மாணவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றனர். அடிக்கடி தங்களுக்குள் மோதிக் கொள்வது வழக்கம். மேலும், வெளியிடங்களிலும் அவ்வப்போது மாணவர்கள் கலாட்டாவில் ஈடுபடுவதும் வழக்கம்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் என்பதால் போலீஸார் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.
வரலாறு காணாத தாக்குதல்
இந்த நிலையில், நேற்று வரலாறு காணாத வகையில் மிகப் பெரிய அளவில் கொலை வெறித் தாக்குதலில் ஒரு பிரிவு மாணவர்கள் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று செமஸ்டர் தேர்வுகள் நடந்தன. அதில் கலந்து கொண்ட ஒரு பிரிவு மாணவர்களைத் தாக்குவதற்காக 50 பேர் கொண்ட இன்னொரு பிரிவு மாணவர்கள் மண்வெட்டி, இரும்புக் கம்பி, டியூப் லைட், உருட்டுக் கட்டைகள் சகிதம் காத்திருந்தனர்.
பரீட்சையை எழுதி முடித்து விட்டு வந்தபோது அந்த மாணவ்ரகள் மீது ஆயுதங்களுடன் காத்திருந்த மாணவர் கும்பல் கொலை வெறித் தாக்குதலில் இறங்கியது.
ஆறுமுகம் என்ற மாணவரை சூழ்ந்த அந்தக் கும்பல் சரமாரியாக தாக்கியது. மேலும் கண்ணில் பட்ட மாணவர்களையும் ஓட ஓட விரட்டித் தாக்கியது.
ஆறுமுகத்தைக் காப்பாற்ற பாரதி கண்ணன் என்ற மாணவர் ஓடி வந்தார். அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களைத் தாக்க முயன்றார்.
இதையடுத்து ஆறுமுகத்தை விட்ட கும்பல், பாரதி கண்ணனை துரத்தியது. அவரை விரட்டி விரட்டி தாக்கியது. அடிபட்டு துடித்த பாரதி கண்ணன் கல்லூரியின் நுழைவாயிலை நோக்கி ஓடினார்.
ஆனாலும் விடாமல் துரத்திய அந்தக் கும்பல் நுழைவாயிலில் வைத்து அவரை மடக்கி மிருகத்தனமாக தாக்கியது.
அடி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார் பாரதி கண்ணன். அப்படியும் விடாமல் ஒரு ஆள் அளவுக்கு உயரம் கொண்ட உருட்டுக் கட்டைகளால் தலை முதல் கால் வரை சரமாரியாக அடித்துத் தள்ளியது.
அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
இத்தனைக்கும் நுழைவாயிலுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸார் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் தாக்குதலையும் தடுக்க முயலவில்லை. அடிபட்டுக் கொண்டிருந்த மாணவரையும் மீட்க முயலவில்லை.
ஒரு மாணவரைப் போட்டு சக மாணவர்கள் மிருகத்தனமாக தாக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து சாலையில் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் பார்த்தனர்.
பின்னர் சுதாரித்துக் கொண்ட பொதுமக்களும், பத்திரிக்கைப் புகைப்படக்காரர்களும் சேர்ந்து நுழைவாயில் அருகே சென்று தாக்குதலை நிறுத்துமாறு கோஷமிடவே, கொலை வெறிக் கும்பல் கல்லூரிக்குள் போய் விட்டது.
பின்னர் பொதுமக்களும், பத்திரிக்கையாளர்களும் பாரதி கண்ணனை மீட்டு தூக்கி வந்தனர். அதன் பின்னர் உள்ளே புகுந்த போலீஸார் பாரதி கண்ணனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல ஆறுமுகம் உள்ளிட்ட மேலும் 2 மாணவர்களும் மீட்கப்பட்டனர்.
படுகாயமடைந்த ஆறுமுகம், பாரதிகண்ணன் ஆகிய இருவரும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆறுமுகம் உயிருக்கு ஆபத்தான நிலையி்ல உள்ளார். பாரதி கண்ணன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அய்யாத்துரை என்ற மாணவருக்கு சிறு காயம் ஏற்பட்டது.
இவர்கள் தவிர சித்திரைச்செல்வன் என்ற மாணவருக்கு காதில் அடிபட்டது. அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கல்லூரிக்குள் நடந்த கொலை வெறித் தாக்குதல் குறித்து அறிந்ததும், தாக்குதல் முடிந்ததும் விரைந்து வந்த முதல்வர் கே.கே.தேவ், மாணவர்களை சமாதானப்படுத்தினார்.
ஏன் இந்த வெறித்தனம்?
சமீபத்தில் நடந்த தேவர் ஜெயந்தியையொட்டி மாணவர்களில் ஒரு தரப்பினர் நந்தனம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்போது மாணவர்கள் ஓட்டிய போஸ்டர்களில் கல்லூரியின் பெயரில் உள்ள அம்பேதகர் என்ற பெயரை சேர்க்கவில்லையாம்.
இதையடுத்து இன்னொரு பிரிவு மாணவர்கள் பிரச்சினை செய்துள்ளனர். இதன் விளைவாகத்தான் நேற்று கொலை வெறித் தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் 2ம் ஆண்டு மாணவர்கள், அடிபட்டவர்கள் 3ம் ஆண்டு மாணவர்கள்.
இந்த கொலை வெறித் தாக்குதல் தொடர்பாக மணிமாறன், சித்திரைச் செல்வன், ரவீந்திரன், குபேந்திரன், வெற்றி கொண்டான், ரவிவர்மன், பிரேம்குமார் ஆகிய மாணவர்கள் மீது கல்லூரி முதல்வர் தேவ் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
4 பேர் கைது
போலீஸார் வழக்குப் பதிவு செய்து திலீப் என்ற மாணவரை உடனடியாக கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் நேற்று இரவு ஜெயக்குமார், பால மணிகண்டன், பிரபாகரன் ஆகியோரையும் கைது செய்தனர்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications