ஐடி பார்க்கில் இட ஒதுக்கீடு?- முதல்வர் பதில் உண்டா?-முதல்வர் பதில்

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: கோவையில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகிவரும் மென்பொருள் பூங்காவுக்கு சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்து அளிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

மேலும் இந்த மென்பொருள் பூங்காவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து அரசு முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று சட்டசபையில், கோவை காங்கிரஸ் எம்எல்ஏ, கோவை தங்கம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி,

கோவை விளாங்குறிச்சியில் 60 ஏக்கர் பரப்பளவில், டிட்கோ, டைடல் பார்க், எல்காட் மற்றும் மத்திய அரசின் சாஃப்ட்வேர் டெக்னாலஜி பார்க் ஆகியவை இணைந்து மென்பொருள் பூங்கா ஒன்றை உருவாக்கி வருகின்றன. அடுத்த மாதத்துக்குள் இந்தப் பணிகள் முடிந்துவிடும்.

இந்தப் பூங்காவுக்கு சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தப் பூங்காவில், 10 ஏக்கர் பரப்பளவு விப்ரோ நிறுவனத்துக்கும், 5 ஏக்கர் நிலம் டிசிஎஸ்ஸூக்கும் மீதியுள்ள இடங்கள் மற்ற நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவுக்குள் குடியிருப்புகள் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்படும் என்றார்.

இந்த மென்பொருள் பூங்காவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு உண்டா? என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், 'சமூக நீதியை நிலைநாட்டுவதில் இந்த அரசு தீவிர அக்கறை காட்டும்' என்று முதல்வர் பதிலளித்தார்.

வேலூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன், தங்கள் மாவட்டத்திலும் இதுபோன்ற மென்பொருள் பூங்கா அமைப்பதற்கான சாத்தியம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை கேட்குமாறு கோரிக்கை விடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+