'தற்கொலை'... மாணவர்கள் மிரட்டல்-வெளியேறிய போலீஸ்
சென்னை: நேற்றைய வன்முறைக்குப் பின்னர் இன்று காலை சென்னை சட்டக் கல்லூரி திறக்கப்பட்டது. அப்போது போலீஸாரை வெளியே செல்லுமாறு கூறி மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கட்டடத்தின் மீது ஏறி நின்று மிரட்டியதால் போலீஸார் கல்லூரியை விட்டு வெளியேறினர்.
தமிழகத்தையே உலுக்கியெடுத்துள்ள வன்முறைக்குப் பின்னர் நேற்று காலை சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இன்று காலை திறக்கப்பட்டது.
செமஸ்டர் தேர்வு நடந்து வருவதால் தேர்வுக் கூடத்திற்கு சில மாணவர்கள் மட்டும் வந்திருந்தனர். மற்றவர்கள் வகுப்புகளுக்குள் செல்லாமல் வளாகத்திலேயே நின்றிருந்தனர்.
தேர்வு எழுத வந்த மாணவர்களும் பின்னர் வெளியேறி விட்டதால் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் கூடி முதல்வருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.
அவர்களை போலீஸாரும், கல்லூரி ஆசிரியர்களும் அமைதிப்படுத்த முயன்றனர். அப்போது 2 மாணவர்கள் கட்டடத்தின் மீது ஏறி நின்று தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி மிரட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் போலீஸார் உடனடியாக வெளியேற வேண்டும், முதல்வரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி மாணவர்கள் கோஷமிட்டனர்.
போலீஸார் தொடர்ந்து முயற்சித்தும் மாணவர்கள் சமாதானமாகவில்லை. இதையடுத்து போலீஸார் கல்லூரியை விட்டு வெளியேறி எதிரே உள்ள உயர்நீதிமன்றத்திற்கு வெளியே போய் நின்று கொண்டனர்.
-
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு.. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications