'இப்படி அடி வாங்கவா படிக்க வைத்தோம்? பெற்றோர்கள் குமுறல்
சென்னை: தங்களது பிள்ளைகளை மாணவர்கள் வெறித்தனமாக தாக்கியபோது அதைத் தடுக்காமல் போலீஸார் மெளனமாக வேடிக்கை பார்த்தது வேதனை அளிக்கிறது. இந்த கொடுமை எங்காவது நடக்குமா என்று சட்டக்கல்லூரி வன்முறையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஆறுமுகத்தின் தாயார் மல்லிகா குமுறலுடன் வேதனை வெளியிட்டுள்ளார்.
சென்னை சட்டக் கல்லூரி வன்முறையில் ஆறுமுகம், அய்யாத்துரை, பாரதி கண்ணன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஆறுமுகமும், பாரதி கண்ணனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் ஆறுமுகம் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். பாரதி கண்ணன் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கீழப்புளி கிராமத்தைச் சேர்ந்தவர். அய்யாத்துரை, நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.
ஆறுமுகத்தின் பெற்றோர் தங்களது மகன் தாக்கப்பட்டதை டிவியில் பார்த்து பதறிப் போய் சென்னைக்கு வந்துள்ளனர். மருத்துவனையில் கண்ணீரும், கம்பலையுமாக காத்துக் கொண்டுள்ளனர்.
ஆறுமுகத்தின் தாயார் மல்லிகா கூறுகையில், எனது மகன் தாக்கப்படுவதைப் பார்த்து பதறிப் போய் விட்டோம். உடனடியாக ஊரிலிருந்து கிளம்பி வந்தோம். எனது மகனின் காலிலேயே கட்டையால் அடித்துள்ளனர். அவன் மரத்தில் தொங்கியபடி பரிதவித்தும் யாரும் உதவிக்கு வரவில்லை.
போலீஸார் தடுக்க முயலாமல் வேடிக்கை பார்த்தபடி இருந்துள்ளனர். பெற்ற மனசு அதைப் பார்த்துப் பதறிப் போய் விட்டது. உலகில் எங்காவது இப்படி ஒரு கொடுமை நடக்குமா.
அவனுக்கு பரீட்சை கிடையாது. யாரோ போன் செய்து கூப்பிட்டு தாக்கியுள்ளனர். திட்டமிட்டு இதைச் செய்துள்ளனர். லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வைத்தது இப்படி அடி வாங்குவதற்கா என்று கதறி அழுதார்.
அய்யாத்துரையின் உறவினரான முருகன் கூறுகையில், இந்தக் கல்லூரியில் நீண்ட காலமாகவே இப்படிப் பிரச்சினை நடந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் கல்லூரி நிர்வாகம் அதைத் தீர்க்க முயற்சிக்கவே இல்லை. அதனால்தான் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்து விட்டது என்றார்.
பாரதி கண்ணனின் தந்தை கருப்பையா, திருவாடானை ஒன்றியம், பழங்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். தனது மகன் தாக்கப்பட்டது குறித்து கருப்பையா கூறுகையில், சட்டக் கல்லூரி வன்முறையை நாங்கள் டிவியில் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.
அப்போதுதான் எனது மகனும் அடிபட்டது குறித்து சக மாணவர்கள் போன் செய்து தெரிவித்தனர். இதையடுத்து மறுபடியும் டிவியில் அந்தக் காட்சி வந்தபோது பார்த்து பதறிப் போய் விட்டோம்.
அனைத்து சமூகத்தினரும் படிக்கும் கல்லூரியில், அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கல்லூரி நிர்வாகத்தின் கடமை. பிரச்சினை இருக்கிறது என்று தெரிந்தும் கூட அதைத் தடுக்காமல் விட்டு விட்டனர். கல்லூரி நிர்வாகம் சரிவர இந்தப் பிரச்சினையைக் கையாளவில்லை.
இந்த வன்முறைக் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications