சட்டக் கல்லூரி: சேவல் சண்டையா நடந்தது? விஜயகாந்த் ஆவேசம்
சென்னை: சேவல் சண்டை நடக்கிறது என்று நினைத்து சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டதை போலீஸார் வேடிக்கை பார்த்தார்களா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆவேசமாக கேட்டுள்ளார்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டக் கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களைக் கையில் ஏந்தி, அவர்கள் தாக்கிக் கொண்டது எந்த அளவுக்கு கிரிமினல் நடவடிக்கைகள் நாட்டில் அரங்கேறி வருகின்றன என்பதை காட்டுவதாக உள்ளது.
சம்பவ தினத்தன்று பயங்கர ஆயுதங்களுடன் ஒரு பகுதி மாணவர்கள் முன் கூட்டியே சட்டக் கல்லூரியில் கூடியுள்ளனர். தேர்வு எழுதிய பிறகு வெளியே வரும் மாணவர்களைத் தாக்க எதிர்பார்த்து இருந்தனர். இதைக் கல்லூரி முதல்வர் காவல்துறைக்குப் புகார் கொடுத்திருக்க வேண்டாமா. வெளியில் நின்ற காவல்துறையினர் இதை அறிந்தும் பேசாமல் இருந்தது ஏன்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் மிருகத்தனமாக தாக்கிக் கொண்ட போது காவல்துறை கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வெட்க்கேடானது.நடப்பது சேவல் சண்டை என்று பார்த்தார்களா?. உயிர் போனால் திரும்ப வருமா?. பொதுமக்கள் பொங்கி எழுந்து அவர்கள் சென்று அடித்த மாணவர்களை விரட்டி அடிபட்ட மாணவர்களை காப்பாற்றியிருக்கிறார்கள்.
தங்கள் முன்னாலேயே கொலைக்குற்றம் நடக்கிறபோது அதைத் தடுக்க வேண்டிய காவல்துறை மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் நடந்து கொள்வானேன்?.
காவல்துறை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தால், ஆளுங்கட்சியினர் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை தண்ணி இல்லா காட்டுக்கு மாற்றி விடுகின்றனர். ஆகவே காவல்துறையினர் யார் எக்கேடு கெட்டால் என்ன நிலைக்கு ஆளாகி விட்டனர்.
உண்மையில் இன்று மக்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் இல்லை.சென்னை அருகே எருக்கஞ்சேரியில், பஸ் நிறுத்தப்படுகிறது, வன்முறைக் கும்பல் பஸ்சில் ஏறி பெட்ரோல் ஊற்றி தீவைத்திக் கொளுத்தி விட்டு தப்பி ஓடுகிறது.
ஏ, தாழ்ந்த தமிழகமே!, நீ தலைநிமிர்வது எப்போது? என்று கேட்டுள்ளார் விஜயகாந்த்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications