6000 பேரை நீக்கிய சன் மைக்ரோசிஸ்டம்ஸ்!
நியூயார்க்: உலகமெங்கும் பல்வேறு வணிக நிறுவனங்கள் தங்கள் செலவைக் குறைக்க பணியாளர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாகிவிட்டன.
கலிபோர்னியாவின் சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள பெரிய கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனங்களும் இப்போது ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன.
உலக அளவில் பிரபல நிறுவனமான சன் மைக்ரோசிஸ்டம்ஸ் தனது 6000 பணியாளர்களை நீக்குவதாக நேற்று அறிவித்துள்ளது. தொடர் நஷ்டம் மற்றும் பங்குகளின் விலை சரிவு போன்றவற்றின் காரணமாக இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் ஆண்டுக்கு 700 முதல் 800 மில்லியன் டாலர் வரை செலவு கட்டுப்படுத்தப்படும் என சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கலிபோர்னியாவின் சான்டா கிளாராவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் இணையதளங்களுக்கான சர்வர் வழங்குவதில் முன்னணியில் உள்ளது.
இங்குள்ள மற்றொரு சாப்ட்வேர் நிறுவனமான அப்ளைட் மெட்டீரியல்ஸ் 1800 பேரை நீக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications