குளிர்காலக் கூட்டத் தொடர் முடிந்தது - சட்டசபை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் முடிவடைந்தது. சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 10ம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்தது. முதல் நாளன்று மறைந்த மதிமுக உறுப்பினர் வீர. இளவரசன் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
குறுகிய கால கூட்டத் தொடரான இதில், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குளிர்காலக் கூட்டத் தொடரில் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் வன்முறை பெரும் அமளியை ஏற்படுத்தியது.
கடைசி நாளான இன்று 2008-09ம் ஆண்டுக்கான முதலாவது துணை மானியக் கோரிக்கை மற்றும் 19 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.











Click it and Unblock the Notifications