அமெரிக்காவில் இந்திய மாணவர் சுடப்பட்டார் - படுகாயம்

அமெரிக்காவில் படித்து வரும் ஆந்திர மாணவர்கள் சமீப காலமாக அதிக அளவில் தாக்கப்பட்டு வருகின்றனர். சமீத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த அபர்ணா ஜிங்காரா என்ற பெண் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், வாரங்கல் நகரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அமெரிக்காவில் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்துள்ளார். டென்னஸ்ஸி மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளார்.
சஷாங் குமார் என்ற மாணவரை, கருப்பர் இனத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நெஷ்வில்லியில் உள்ள சஷாங் குமார் குடியிருந்து வரும் வட்டுக்கு வெளியே வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் 2 குண்டுகள் சஷாங் குமாரின் வயிற்றில் பாய்ந்தன. அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்குப் படிக்க சென்றார் சஷாங் குமார். அவரது தந்தை பேராசிரியர் ஆவார். படித்துக் கொண்டே பகுதி நேர வேலையையும் பார்த்து வருகிறார் குமார்.
ஆந்திராவைச் சேர்ந்த இருவருடன் அபார்ட்மென்ட் ஒன்றில் தங்கிப் படித்து வந்தார்.
சமீப மாதங்களில், அமெரிக்காவில் தாக்குதலுக்குள்ளாகியுள்ள 7வது ஆந்திர மாணவர் சஷாங் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications