டெல்லி பாஜக வேட்பாளர் மரணத்தில் மர்மம்?
டெல்லி: டெல்லி பாஜக எம்.எல்.ஏவும், சட்டசபைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருமான பூரன் சந்த் யோகியின் மரணத்தில் மர்மம் நிலவுகிறது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மாரடைப்பால் இறந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லி, ராஜேந்தர் நகர் எம்.எல்.ஏவாக இருந்து வந்தர் பூரன் சந்த் யோகி. இவர் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்ட்டிருந்தார்.
இந்த நிலையில் தனது இல்லத்தில் நேற்று அவர் மரணமடைந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக இன்னொரு தகவல் கூறுகிறது.
ஆனால் பூரி தற்கொலை செய்து கொள்ளவில்லை என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். பூரிக்கு வயது 73 என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மரணத்தால் தற்போது இத்தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பூரியின் மரணம் குறித்து டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் கூறுகையில், முதல் கட்ட விசாரணையிலிருந்து இது தற்கொலை எனத் தெரிய வந்துள்ளது. இருந்தாலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வரை காத்திருக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
தேர்தல் முடிவு குறித்து கவலையுனுடம், பதட்டத்துடனும் இருந்துள்ளார் யோகி. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆனால் பூரி இதய நோயாளி என்றும், மாரடைப்பு ஏற்பட்டுத்தான் அவர் மரணமடைந்தார் என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து பூரியின் மகன் ராஜீவ் கூறுகையில், எனது தந்தை தனது வெற்றி குறித்து நம்பிக்கையுடன் இருந்தார். அவர் பதட்டத்துனடோ, மன அழுத்தத்திலோ இல்லை என்கிறார்.
பாகிஸ்தானில் உள்ள குஜ்ரன்வாலாவில் 1935ம் ஆண்டு பிறந்தவர் பூரி. 1967ல் அரசியலில் இணைந்தார். ராஜேந்தர் நகர் தொகுதியில், 93ம் ஆண்டு முதல் 3 முறை வெற்றி பெற்றுள்ளார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications