தேமுதிக தலைமையில் பொற்கால ஆட்சி மலரும்: பிரேமலதா
சென்னை: தமிழகத்தில் தேமுதிக தலைமையில் பொற்கால ஆட்சி உருவாகும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
மின்வெட்டு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தேமுதிக மகளிரணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடந்தது.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த பிரேமலதா பேசியதாவது:
சம்பிரதாயத்திற்காகவோ, நிகழ்வுக்காகவோ இந்த ஆர்ப்பாட்டம் நடக்கவில்லை. விலைவாசி உயர்வு, மின்வெட்டு ஆகிய இரண்டு பிரச்சனைகளால் தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை கண்டிக்கும் வகையிலும், வரும் காலத்தில் தமிழகம் எப்படி இருக்க வேண்டும், அதற்கு எப்படி தயார்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
ஒரே நாளில் இந்த பிரச்சனைகள் வந்துவிடவில்லை. விவசாய உற்பத்தி தமிழகத்தில் 2 சதவீதம் மட்டுமே இருக்கிறது. இதனால் உணவு பற்றாக்குறையும், அதன் காரணமாக விலைவாசி உயர்வும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சிகள் ஐந்தாண்டு திட்டங்களை வகுத்தார்களே தவிர அதை செயல்படுத்தவில்லை. சேமிக்க முடியாமல் வீணாகும் பொருட்களை பாதுகாத்தாலே விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
தமிழகத்தில் தற்போது 7200 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் 2000 மெகாவாட் தேவைப்படுகிறது. இதில் 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு தருவதாக கூறியுள்ளது. ஆனால் எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை.
சூரிய சக்தி சோலார் மூலம் மின்சாரம் தயாரிப்பதை அதிகரிக்க வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 68,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு திட்டத்திலேயே இவ்வளவு என்றால், ஒவ்வொரு திட்டத்திலும் எவ்வளவு இருக்குமோ?
தேமுதிகவிற்கு மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பொற்கால ஆட்சி அமைய வேண்டுமென்றால் ஒரு புதிய சக்தி, புதிய ஆட்சி அமைய வேண்டும். விஜயகாந்த் தலைமையில் தமிழகத்தில் பொற்கால ஆட்சி அமையும்.
அமெரிக்காவில் ஒபாமா தலைமையில் ஒரு மாற்றம் வந்துள்ளதை போல, தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். தேமுதிக தலைமையில் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நடைபெறும் என்றார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications