தொடர்ந்து பொய் பேசும் இலங்கை அரசு: ராமதாஸ்

வேலூர் வந்த டாக்டர் ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை பிரச்னை, முக்கியமான திருப்பத்தை எட்டியுள்ளது. போரை நிறுத்த இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அதிபர் நிராகரித்து விட்டார். இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்து வருகின்றது.
பொய் சொல்லி இலங்கை
கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ள தகவல்களை பார்த்தால் இலங்கை முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்க வேண்டும், அங்கு விடுதலைப் புலிகள் யாரும் உயிருடன் இருந்திருக்க முடியாது. இலங்கை பிரச்சனையில் அந்நாட்டு அரசு தொடர்ந்து பொய் சொல்லி கொண்டிருக்கிறது.
தற்போது இந்தியா, இலங்கை பிரச்னையில் முக்கியமான முடிவு எடுத்தாக வேண்டும். அங்கு தனி ஈழத்துக்காக போராடி கொண்டிருப்பவர்களை தீவிரவாதிகள் என்று சொல்வதில் எந்த பயனும் இல்லை.
இந்தியாவில் இரண்டு லட்சம் இலங்கை அகதிகள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்திய மீனவர்கள் தினமும் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது உயிரை கையில் வைத்து கொண்டு சென்று வருகின்றனர்.
சில ஆண்டுகளில் மட்டும் 500 இந்திய மீனவர்களை இலங்கை அரசு சுட்டுக்கொன்றுள்ளது. இந்தியாவைப் போல வேறு எந்த நாடும் இதை சகித்து கொண்டிருக்காது.
தற்போது இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்; பேச்சு நடத்த வேண்டும் என்று இந்தியா எச்சரிக்கை விடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். இலங்கை பிரச்னை குறித்து விவாதிக்க மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.
இலங்கை இன சிக்கல் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறது. இதில் பா.ம.க. தலைவர் கலந்துகொள்வார்.
திமுக கூட்டணி...
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். பிப்ரவரி மாதம் பா.ம.க., செயற்குழு, பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து முடிவெடுக்கும் என்றார் ராமதாஸ்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications