ஈழப் பிரச்சினையில் அக்கறையில்லாத பிரதமர்: திருமா. குற்றச்சாட்டு
சென்னை: ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் தீர்வு காண்வதில் பிரதமர் மன்மோகன் சிங் அக்கறை காட்டவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் ஈழத்தமிழர் படுகொலை தொடர்பான ஓவிய முகாம் நடைபெற்றது.
பிரபல ஓவியர்கள் தட்சிணாமூர்த்தி, மருது, புகழேந்தி, வீரசந்தானம், மோகன் கல்யாணி, மனோகரன் உள்ளிட்ட ஓவியர்கள் ஈழத் தமிழர்களின் பரிதாப நிலையை சித்திரங்களாக தீட்டினர்.
இந்த ஓவிய முகாமை தொடங்கி வைத்து திருமாவளவன் பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிறகும் போர் நிறுத்தம் செய்ய முடியாது என்றும், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை துறந்து சரணடைய வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
ஈழத்தமிழர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதில் பிரதமர் மன்மோகன் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையே ராஜபக்சேவின் பேச்சு சுட்டிக்காட்டுகிறது.
அங்கு போர் நிறுத்தம் செய்ய ராஜபக்சேவை வலியுறுத்த வேண்டும்.
மத்திய அரசால்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமரிடம் இதை வலியுறுத்த வேண்டும்.
மத்திய அரசு இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் இந்திய ராணுவம் இலங்கை மீது போர் தொடுக்க வேண்டும் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications