For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

25,000 பேருக்கு வேலை தரும் இன்போஸிஸ்

By Staff
Google Oneindia Tamil News

Gopalakrishnan, CEO, Infosys
டெல்லி: இந்தியாவின் இரண்டாவது பெரிய சாப்ட்வேர் நிறுவனம் எனப்படும் இன்போஸிஸ் 25000 பேருக்கு வேலை தரும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

எந்த செய்தித்தாளை அல்லது வலைதளத்தைப் பார்த்தாலும், ஆயிரக்கணக்கான வேலை இழப்புகள் மட்டுமே செய்திகளாக வரும் இந்த நாட்களில் இந்தச் செய்தி நிச்சயம் ஒரு இனிய மாறுதல்தான்.

வரும் நிதியாண்டில் ஐரோப்பா மற்றும் ஜப்பான் நிறுவனங்களிடமிருந்து கணிசமான ஆர்டர்களை இன்போஸிஸ் எதிர்பார்க்கிறது. எனவே இந்த புதிய திட்டம் எளிதாக நடைமுறைப்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது இந்நிறுவனம்.

இதுகுறித்து இன்போஸிஸ் முதன்மை செயல் அலுவலர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், நடப்பு ஆண்டில் இன்போஸிஸ் வருவாயில் சற்று சுணக்கம் காணப்பட்டாலும், வரும் ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். வெளிநாட்டு ஆர்டர்கள் நிறையக் கிடைக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன.

இந்த வேலைகளைச் செய்ய 25 ஆயிரம் பேரை புதிதாக நியமிக்கிறோம். ஏற்கெனவே 9 ஆயிரம் பேருக்கு வேலைக்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 16 ஆயிரம் பேர் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X