கோவை ரயில்களில் மாற்றம்- பல ரயில்கள் ரத்து

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
கோவை ரயில்வே யார்டை நவீனப்படுத்தும் பணி நடைபெறுவதால், சென்னை சென்ட்ரல்- கோவை இடையிலான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்:
தற்போது கோவை வழியாக செல்லும் அனைத்து மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் வரும் 25ம் தேதி முதல் டிசம்பர் 12ம் தேதி வரை கோவை செல்லாது. அதற்கு பதிலாக அந்த ரயில்கள் அனைத்தும் இருகூர் வழியாக திருப்பி விடப்பட்டு பாடனூரில் நிறுத்தப்பட்டுவிடும்.
சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இம் மாதம் 26, 29 மற்றும் டிசம்பர் 2,5,8,11 ஆகிய தேதிகளில் கோவை வரை செல்வதற்கு பதிலாக ஈரோட்டிலேயே நிறுத்தப்பட்டுவிடும்.
அதேபோல சென்ட்ரல் வழியாக கோவை செல்லும் ஜெய்ப்பூர்- கோவை எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 28ம் தேதி மற்றும் டிசம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் ஈரோட்டிலே நிறுத்தப்படும்.
சென்னை சென்ட்ரல்- மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் கோவை பகுதிகளுக்கான பெட்டிகள் 25ம் தேதி முதல் டிசம்பர் 12ம் தேதி வரை கோவை வடக்கு பகுதியிலே துண்டிக்கப்படும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 29ம் தேதி, டிசம்பர் 6, 13 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் வாராந்திரி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 28ம் தேதியும், டிசம்பர் 5, 12 ஆகிய தேதிகளிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்.
மேலும் வரும் 25ம் தேதி முதல் டிசம்பர் 12ம் தேதி வரை மங்களூர்- கோவை பயணிகள் ரயில் கோவை வரை செல்வதற்கு பதிலாக பாடனூர் வரை தான் செல்லும். இதே போல் கோவையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக பாடனூரில் இருந்து புறப்பட்டு செல்லும்.
சோரனூர்- கோவை- திருச்சூர் பயணிகள் ரயில் பாடனூரிலேயே நிறுத்தப்படும். கோவை- பாலக்காடு- கோவை ரயில், கோவை- சோரனூர் ரயில் ஆகியவை போத்தனூரிலேயே நிறுத்தப்படும்.
ஈரோடு- கோவை பயணிகள் ரயில் கோவை வடக்கு பகுதியிலேயே நிறுத்தப்படும்.
கோவை- மங்களூர் (387, 388) பயணிகள் ரயில் பாடனூரில் நிறுத்தப்படும். திருச்சி- பாலக்காடு பயணிகள் ரயில் இருகூரில் நிறுத்தப்படும்.
அதே நேரத்தி்ல் சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில், கோவை எக்ஸ்பிரஸ் ரயில், கோவையில் இருந்து சென்ட்ரலுக்கு வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், லோக்மானியா திலக் எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள், நிஜாமுதீன்-கோவை கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள், கோவை ராஜ்கோட் வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் எவ்வித மாற்றமும் இல்லை.
இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications