செனட் உறுப்பினர் பதவி-ராஜினாமா செய்த ஓபாமா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஓபாமா, தனது செனட் உறுப்பினர் பதவியை இன்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார்.
அமெரிக்க அதிபராக இருப்பவர்கள் நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் உறுப்பினராக இருக்க கூடாது. மேலும் எந்த அதிகாரப் பொறுப்பிலும் இருக்கக் கூடாது. அதற்கேற்ப தற்போது செனட் உறுப்பினராக உள்ள ஓபாமா, தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இல்லினாய்ஸ் மாகாணத்திலிருந்து செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓபாமா.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், இல்லினாய்ஸ் மாகாணத்திலிருந்து செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்ற நேரத்தை நான் மறக்க மாட்டேன். இந்தப் பொறுப்பை சரியான முறையில் செய்ய உதவிய இந்த மாகாணத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
ஒரு பயணத்தை முடித்து விட்டு அடுத்த பயணத்தை நோக்கி நான் பயணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஓபாமாவின் இடத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய உறுப்பினர் நியமிக்கப்படுவார் என இல்லினாய்ஸ் மாகாண ஆளுநர் ராட் பிளகோஜெவிக் கூறியுள்ளார்.
செனட் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து தனது அமைச்சரவைக் குழுவை உருவாக்கும் பணியில் ஓபாமா தீவிரமாக இறங்கியுள்ளார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications