விபத்துக்குள்ளான ரஷ்ய நீ்ர்மூழ்கியில் இந்தியர்கள்?

அகுலா-2 ரக நீர் மூழ்கிக் கப்பலான அது அணு சக்தியால் இய்கக் கூடியது. K-152 நெர்பா என்ற பெயர் சூட்டப்பட்ட அந்தக் கப்பல் இந்திய கடற்படைக்கு 10 ஆண்டு குத்தகைக்கு தரப்பட இருந்தது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கவுள்ள விமானம் தாங்கிக் கப்பலான கோர்க்ஸ்கோவுடன் சேர்த்து இந்தக் கப்பலையும் இந்தியா வாங்க இருந்தது. (கோர்கோவுக்கு மேலும் 2 பில்லியன் டாலர் பணம் கேட்டு ரஷ்யா புதிய சிக்கலை ஏற்படுத்தி வருவது தனிக் கதை)
இந்திய கடற்படையைச் சேர்ந்த பல வீரர்கள் அணி, அணியாக இந்தக் கப்பலில் பயிற்சி பெற்று வந்தனர்.
ரஷ்யாவின் அமுர் பகுதியில் உள்ள கோம்சோமோல்ஸ்க் நீர் மூழ்கித் தளத்தில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
80 பேர் பயணிக்கக் கூடிய இந்தக் கப்பலில் கடந்த சனிக்கிழமை இரவில் வாயுக் கசிவு ஏற்பட்டது. திடீரென அதில் பிரீயான் வாயு கசிந்ததில் 20 பேர் பலியாயினர். முதலில் இவர்கள் அனைவரும் ரஷ்யர்கள் என்று கருதப்பட்டது.
ஆனால், விபத்து நடந்தபோது அதில் 208 பேர் இருந்ததும், அதில் இந்தியர்களும் இருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
பெயர் குறிப்பிட விரும்பாத ரஷ்ய பாதுகாப்பு நிபுணர் ஒருவர் இதைத் தெரிவித்துள்ளார்.
இந்த நீர் மூழ்கிக் கப்பலை கட்டும் பணியில் ஆரம்பித்து இப்போது கடலில் பயிற்சிகள் நடக்கும் நிலை வரை ஒவ்வொரு கால கட்டத்திலும் இதில் இந்திய கடற்படையினர் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஆனால், இதை இந்திய கடற்படை உறுதிப்படுத்தவில்லை. ரஷ்யாவில் இந்திய கடற்படையினர் இருப்பதும், நீர் மூழ்கித் திட்டங்களில் இணைந்து பணி புரிவதும் உண்மை. இந்த விஷயத்தை (விபத்து) நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம் என்று மட்டும் இந்தியக் கடற்படை கருத்துத் தெரிவித்துள்ளது.
-
சிலிண்டர் தர மாட்டோம்! புதிய கனெக்ஷன் தர மாட்டோம்.. மத்திய அரசு முக்கிய உத்தரவு! யாருக்கு பொருந்தும் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்?












Click it and Unblock the Notifications