ரூபாய் மதிப்பு: வரலாறு காணாத வீழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil

அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருவதாலும், நாட்டின் பங்கு வர்த்தகம் பெரும் வீழ்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டுள்ளதாலும், அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது.
இதனால் தொடர்ந்து ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. புதன்கிழமை மாலை அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு ரூ.50.01-ஆகக் குறைந்திருந்தது. ஆனால் இன்று காலை வர்த்தகம் துவங்கிய சில மணிநேரத்துக்குள் ரூபாய் மதிப்பு ரூ. 50.55 ஆகக் குறைந்துவிட்டது.
சென்ற அக்டோபர் மாதம் 27-ந் தேதியன்று டாலரின் வெளிமதிப்பு ரூ.50.29-ஆக இருந்ததுதான் ரூபாயின் அதிகபட்ச வீழ்ச்சியாக இருந்தது. இப்போது ரூ.50.55 எனக் குறைந்துள்ளது முன்னெப்போதும் காணாத வீழ்ச்சியாகும்.












Click it and Unblock the Notifications