மேலும் 14 சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது - இதுவரை 43!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை சட்டக் கல்லூரி மாணவர் வன்முறை தொடர்பாக நேற்று மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 43 பேர் கைதாகியுள்ளனர்.
நவம்பர் 12ம் தேதி கல்லூரியில் வன்முறை நடந்தது. இதையடுத்து அடுத்த நாள் கல்லூரி முதல்வர் அறையை மாணவர்கள் அடித்து சூறையாடினர். இந்த வழக்கில்தான் நேற்று கைதான 14 பேரும் பிடிபட்டுள்ளனர்.
கல்லூரி முதல்வராக இருந்த ஸ்ரீதேவ் கொடுத்த புகாரின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது ஸ்ரீதேவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட 14 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications