உயர் மின் அழுத்தம்-15 டிவிகள் 'டமால்'!
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் திடீர் உயர் மின் அழுத்தம் காரணமாக 15 வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வெடித்துச் சிதறின.
புதுக்கோட்டை மாவட்டம், இழுப்பூர் சிவன் கோயில் தெரு, ஆசாரி தெரு, தெப்பகுளத் தெரு, கள்ளர் தெரு போன்ற வீடுகளி்ல் நன்கு இயங்கிக் கொண்டிருந்த டிவிக்கள் திடீரென வெடித்து சிதறின.
டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இது குறித்து மின்சார வாரியத்திற்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மின்சார வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து அப் பகுதியின் டிரான்ஸ்பார்மரில் பழுதை நீக்கினர்.
தங்களது டிவி பெட்டிகளுக்கு மின் வாரியம் தான் நஷ்டஈடு தர வேண்டும் என அப் பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications