இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அழைப்பு

குறிப்பாக ஆஸ்திரேலியா, தங்கள் நாட்டுக்கு ஐடி தொழில்நுட்ப நிபுணர்களை அதிகம் அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்திய பொருளாதார தேக்க நிலையால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்திய பீபிஓ துறையுடனான தங்கள் வர்த்தகத் தொடர்புகளை நிறுத்திக் கொண்டுள்ளன. இதனால் பல நிறுவனங்களின் வருவாயும், லாபமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுநாள் வரை, அமெரிக்காவுக்கே அதிக அளவில் சேவைகளை வழங்கி வந்தன. இப்போது அமெரிக்காவே ஆட்டங்கண்டு விட்டதால், இந்த வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இச்சூழ்நிலையில், இந்திய ஐடி நிபுணர்கள் மற்றும் இடைநிலை ஊழியர்களுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக பீபிஓக்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கத் தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சர்வதேச பொருளாதார தேக்க நிலை, ஆஸ்திரேலியாவை அதிகம் பாதிக்கவில்லை அந் நாட்டின் பல்வேறு துறைகளின் தொழில்நுட்ப தீர்வுகளுக்கு இந்திய நிறுவனங்கள் சேவைதான் இப்போது அதிகம் தேவைப்படுகிறது.
இதற்கு முன்பும்கூட அதிக ஐடி வல்லுநர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் தேவைப்பட்டார்கள். ஆனால் அப்போது இந்திய ஐடி நிறுனங்கள் அமெரிக்கா-ஐரோப்பாவுக்கே முன்னுரிமை அளித்து வந்தன.
'ஆஸ்திரேலியாவின் பீபிஓ துறையின் சந்தை மதிப்பு 400 கோடி டாலர். அங்கு, தொழில்நுட்ப நிபுணர்களுக்கு இப்போதும் பற்றாக்குறை உள்ளது. இந்திய நிபுணர்களுக்குத் தரும் தொகையை விட, ஆஸ்திரலிய நிபுணர்களுக்கு பல மடங்கு சம்பளம் தரவேண்டும் என்பதால், ஆஸ்திரேலிய நிபுணர்களின் முதல் சாய்ஸ் இந்தியாவாக உள்ளது' என்கிறார் இந்தோ-ஆஸ்திரேலிய வர்த்தக சபைத் தலைவர் சரத்சந்திரன்.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு தகவல் தொழில்நுட்பச் சேவை அளிக்க இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளன. குறிப்பாக, சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பீ.பி.ஓ. பிரிவான சுந்தரம் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனம், ஆஸ்திரேலிய நாட்டு நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளை அளித்து வருகிறது. இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் 10 சதவீதம் ஆஸ்திரேலியாவிலிருந்து பெறப்படுவது குறிப்படத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
HCL: 200 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. கையைவிட்டு போகும் 2வது அமெரிக்க டீல்.. அதிர்ச்சியில் ஐடி துறை -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications