பிரஞ்யா சித்திரவதை-பிரதமரிடம் அத்வானி புகார்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், உள்நோக்கத்துடன் செயல்படுவதாக அத்வானி குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், தன்னை போலீஸார் சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். நாசிக் கோர்ட்டிலும் இதை அவர் எழுத்துப் பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மும்பை போலீஸாரின் செயல்பாட்டை அத்வானி கடுமையாக கண்டித்து அறி்க்கை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து நேற்று பிரதமர் மன்மோகன் சிங், அத்வானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மாலேகான் வழக்கை மும்பை போலீஸார் கையாளும் விதம் குறித்த தனது கடும் அதிருப்தியை பிரதமரிடம் அத்வானி தெரிவித்ததாக பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பெண் அதிகாரியைக் கூட உடன் வைத்துக் கொள்ளாமல் பெண் துறவி பிரக்யாவிடம் விசாரணை நடத்தியதற்கும் அத்வானி கண்டனம் தெரிவித்தார்.
மேலும், ஒரு பெண் கைதியை சித்திரவதைப்படுத்தியுள்ள போக்கும் கடும் கண்டனத்துக்குரியது. இது உச்சநீதிமன்ற வழிகாட்டு உத்தரவை மீறும் செயல் என்றும் அத்வானி பிரதமரிடம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications