ஸ்டெர்லைட் ஆலையில் மயிலாடுதுறை என்ஜினியர் பரிதாப சாவு!
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் மயிலாடுதுறையைச் சேர்ந்த என்ஜினியர் பரிதாபமாக பலியானார்.
மயிலாடுதுறை நல்லாத்துக்குடியைச் சேர்ந்தவர் சம்பூர்ண ஆனந்த். இவர் மயிலாடுதுறை கல்லூரியில் ஆய்வக உதவியாளாராக உள்ளார். இவரது மகன் விஜய் (24). இவர் என்ஜினியரிங் பட்டதாரி ஆவார்.
இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் என்ஜினியராக பணியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் ஆலையில் உள்ள கூலிங் பிளாண்ட்-ன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் சிக்கி விஜய் பரிதாபமாக இறந்து போனார். அங்கு வேலை செய்தவர்கள் சிதறி ஓட்டம் எடுத்தனர்.
மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மெக்கானிக் பிரிவு ஒப்பந்த ஊழியர் கேரளாவைச் சேர்ந்த கணேசன் என்பவர் படுகாயம் அடைந்தார்.
சிகிச்சைக்காக இவரை தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications