தங்கம் விலை ஒரே நாளில் ரூ.384 உயர்வு
சென்னை: மீண்டும் உச்சத்தை நெருங்குகிறது தங்கத்தின் விலை. நேற்று ஒருநாள் மட்டும் பவுனுக்கு ரூ.384 அதிகரித்துள்ளது.
சமீப காலமாக தங்கத்தின் விலை அசாதாரண ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.
1997-ம் ஆண்டு ஒருபவுன் தங்கம் ரூ.3 ஆயிரத்து 400 ஆக இருந்தது. ஆனால் வர்த்தகம் நுழைந்த பின்னர் விலை தாறுமாறாக உயரத் தொடங்கியது.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி, ஒரு பவுன் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தைத் தாண்டியது. அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.1250க்கும், ஒரு பவுன் 10 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் சற்று விலை குறைந்தது.
ஜூலை மாதம் 15ந் தேதி ரூ.10 ஆயிரத்தை தாண்டியது 1 சவரன் தங்கம்.
கடந்த 4 மாதங்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்த போதும், மீண்டும் தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.10 ஆயிரத்தை நெருங்குகிறது. கடந்த 14-ம் தேதி ரூ.8824க்கு விற்பனையான ஒரு பவுன் தங்கம், நேற்று ரூ.9488 ஆக அதிகரித்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.1186க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரே நாளில் மட்டும் தங்கம் ரூ.384 அதிகரித்துள்ளது.நாளை பங்குச் சந்தை மாறுதல்களைப் பொறுத்து மீண்டும் தங்க விலை உயரக் கூடும் என வியாபாரிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். பொது மக்களோ, நகைக் போகலாமா வேண்டாமா என்ற அச்சத்துடன் நகைக் கடைகளைப் பார்த்த வண்ணம் செல்கின்றனர்!
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை!












Click it and Unblock the Notifications