விடுதலைப் புலிகளின் முக்கிய முகாம் வீழ்ந்தது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: முல்லைத்தீவு மாவட்டம் ஆதங்குளம் என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய பயிற்சி முகாமை ராணுவம் கைப்பற்றியுள்ளது.
அங்கு மொத்தம் நான்கு பங்கர்கள் மற்றும் எட்டு பயிற்சிக் கொட்டகைகளை விடுதலைப் புலிகள் அமைத்திருந்தனர். அனைத்தையும் கைப்பற்றி விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.
இந்த இலக்குகளை விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் தாக்கி இலங்கை படையினர் பிடித்தனர். இங்கு நடந்த கடும் சண்டையில் விடுதலைப் புலிகள் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த முகாமிலிருந்து ஐந்து டி-56 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
இதேபோல திவில் என்ற இடத்தில் நடந்த இன்னொரு சண்டையிலும் விடுதலைப் புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications