அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டம் இல்லை: அரசு
சென்னை: தமிழகத்தில் தங்கியுள்ள அனைத்து இலங்கை அகதிகளையும் திருப்பி இலங்கைக்கு அனுப்பும் திட்டம் எதுவம் இல்லை. இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் தவறு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை அகதிகள், இந்தியாவில் தங்கியிருக்கும் காலம் முடிவடைந்து விட்டதால், அவர்கள் அனைவரையும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக ஒரு ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
இதை தமிழக அரசு திட்டவட்டமாக மறுக்கிறது. இந்த செய்தியை வெளியிட்டுள்ள ஏடு, ஒரு அரசியல் கட்சியின் மாநிலச் செயலாளருக்குச் சொந்தமானதாகும்.
அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இது தவறான செய்தி. இந்த செய்தியால், தமிழகத்தில் உள்ள 115 முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகளின் மனங்களில் தேவையில்லாத பயம் ஏற்படும்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கியுள்ள வசதிகளுடன் அமைதியான முறையில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அகதிகள் அனைவரும் திருப்பி அனுப்பபடப் போகிறார்கள் என்ற செய்தியை அரசு திட்டவட்டமாக மறுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications