ஜெயலலிதாவுடன் சோ ராமசாமி முக்கிய ஆலோசனை

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான அரசியல் கூட்டணிகளில் கட்சிகள் மும்முரமாகியுள்ளன. தமிழகத்தில் அரசியல் அணிகளில் பெரும் மாற்றம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பரதன், கிட்டத்தட்ட கூட்டணிக்கான வாய்ப்புகள் உறுதியாகி விட்டதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், சோ நேற்று போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சிபிஐ, அதிமுக கூட்டணிக்கு வருவது உறுதியாகி விட்ட போதிலும் கூட, சிபிஎம், வருவதற்கான வாய்ப்புகள் இன்னும் தெளிவாகவில்லை. சேது சமுத்திரத் திட்டம், இந்துத்வா, இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக சிபிஎம்முக்கும், அதிமுகவுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாத இறுதியில் டெல்லியில் நடைபெறும் சிபிஎம் பொலிட்பீரோ கூட்டத்திற்குப் பின்னர்தான் அந்தக் கட்சி அதிமுக அணிக்கு வருமா என்பது உறுதியாக தெரிய வரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications