டோக்கன் கொடுத்து 6 மாதம் ஆகியும் வராத இலவச டிவி!

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: கும்பகோணம் அருகே இலவச கலர் டிவி வழங்க டோக்கன் கொடுத்து 6 மாதம் ஆகியும் வழங்கப்படவில்லை.

கும்பகோணம் அருகே உள்ள இன்னாம்பூர் ஊராட்சியில் உள்ள பொது மக்களுக்கு இலவச கலர் டிவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இலவச கலர் டிவி வழங்க கடந்த 6 மாதத்திற்கு முன்பே சுமார் 1000 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

இந்த டோக்கனை ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பயனாளிகளுக்கு வழங்கியுள்ளார்.

ஆனால் டோக்கன் வழங்கி பல மாதம் ஆகியும் டிவி கிடைக்காததால், மக்கள் உடனடியாக டிவி வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வந்தனர்.

ஆனால் இதுவரை டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு டிவி வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தூதன போராட்டம் நடத்தினர்.

அதன்படி ஒரு டிவியை எடுத்து வந்து அதை நடு ரோட்டில் வைத்து அந்த டிவிக்கு மாலை அணிவித்து போரட்டம் நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+