இந்தியாவில் 2000 புதிய கடைகள்: சோனி திட்டம்

இதுகுறித்து நிறுவனத்தின் இந்திய மேலாளர் அதிந்திரியா போஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது 1500 சில்லறைக் கடைகள் உள்ளன. இவற்றை 2000 மாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு மார்ச் மாத்திற்குள் இந்த இலக்கை அடைவோம்.
இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்களை நாங்கள் சிறந்த புதிய மார்க்கெட்டாக கருதுகிறோம்.
பஞ்சாப் மாநிலத்தில் எங்களது தயாரிப்புகளுக்கு நல்ல கிராக்கியும், வரவேற்பும் உள்ளது. அதேபோல பிற மாநிலங்களிலும் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் எங்களது படைப்புகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.இப்படிப்பட்ட மார்க்கெட்டை நாங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள இலக்கு வைத்துள்ளோம்.
உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் இதுவரை எங்களுக்குப் பாதிப்பு ஏதும் இல்லை. முந்தைய ஆண்டை விட கடந்த ஆண்டில் 7 மடங்கு வியாபாரம் நடந்துள்ளது. இந்த ஆண்டும், 3 முதல் 4 மடங்கு அளவுக்கு வியாபாரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ரூ. 9,490 விலையில், புதிய பி.எஸ்.பி. 3000 சீரிஸ் தொடரை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். அதில் அதி நவீன எல்.சி.டி இடம் பெற்றிருக்கும். இதன் மூலம் மிக துல்லியமாக பார்க்க முடியும். மேலும் இதனுடன் பில்ட் இன் மைக்ரோபோனும் அடங்கியிருக்கும்.
அடுத்த மாதம் 80 ஜிபி பிஎஸ்3 அறிமுகப்படுத்தப்படும்.
எங்களது நிறுவனம் பிளேஸ்டேஷன்3, பிளேஸ்டேஷன்2, பிளேஸ்டேஷன் போர்ட்டபிள், பிளேஸ்டேஷன் நெட்வொர்க் சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் ஆகியவற்றை ஐரோப்பா, மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஓசியானியா ஆகிய பிரதேசங்களில் 102 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது என்றார் அவர்.


Click it and Unblock the Notifications
